top of page

பாதிக்கப்பட்டவர்களுக்கு அப்பால் - நிலைத்தன்மை

Writer's picture: Women for PoliticsWomen for Politics

இந்த ஆண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு அப்பால் தொடரின் ஆரம்ப பதிப்பில், நிலைத்தன்மைக்கான முயற்சிகளை முன்னெடுத்துச் செல்லும் தெற்காசியாவைச் சேர்ந்த பெண் அரசியல் தலைவர்களின் எழுச்சியூட்டும் கதைகளை நாங்கள் வழங்குகிறோம்.

 

Women leaders


மரியம் ஔரங்கசீப்

முன்னாள் தேசிய சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பாகிஸ்தானின் மத்திய அமைச்சர்

Marriyum Aurangzeb

பாகிஸ்தானின் பிரதமராக பணியாற்றிய போது, ​​மரியம் ஔரங்கசீப், ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழலில் வலுவான கவனம் செலுத்தி, நிலைத்தன்மை மற்றும் 5-இ கட்டமைப்பில் முன்முயற்சிகளை வழிநடத்தினார். பாக்கிஸ்தானில் உள்ள இளைஞர்கள் தண்ணீர் மற்றும் எரிசக்தி பயன்பாடு, கழிவு மேலாண்மை மற்றும் பிற முக்கியமான பிரச்சினைகள் குறித்து விழிப்புடன் இருக்க ஊக்குவிப்பதற்காக "Planet Champs" செயலியை அவர் அறிமுகப்படுத்தினார். அவர் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக இருந்த காலத்தில், ரேடியோ பாகிஸ்தானில் பருவநிலை மாற்றம் மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகள் தொடர்பான திட்டங்களை ஊக்குவித்தார்.

Radio Pakistan and Pakistan Today, 2023


உமா ரெக்மி

நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் நேபாளத்தின் முன்னால் அமைச்சர்

Uma Regmi


நேபாளத்தில் உள்ள பெண்கள், குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்கள் அமைச்சர் உமா ரெக்மி, 2045 ஆம் ஆண்டிற்குள் நிகர-பூஜ்ஜிய உமிழ்வை அடைவதில் நேபாளத்தின் வலுவான அர்ப்பணிப்பை வலியுறுத்தினார். ஐக்கிய நாடுகள் சபையில் அவர் ஆற்றிய உரையின் போது, ​​ காலநிலை மாற்றத்தில் ஏற்படும் எதிர்மறையான விளைவுகளைப் பற்றி பெண்களுடன் சேர்ந்து முன்னின்று போராடினர் . அவர்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகள். பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட பெண்களைத் திரட்டுவதில் ரெக்மி பொறுப்பேற்றார். அவரது வழிகாட்டுதலின் கீழ், நேபாளம் 2020-2030 காலநிலை மாற்ற செயல் திட்டத்தில் பாலின சமத்துவம் மற்றும் சமூக உள்ளடக்கத்தை அடிப்படைக் கொள்கைகளாக இணைத்தது.

The Permanent Mission of Nepal to the UN, March 2022


அஜந்த பெரேரா

இலங்கை அரசியல்வாதி மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்

Ajantha Perera


அஜந்த பெரேரா, சோசலிஸ்ட் கட்சியின் உறுப்பினராகவும்,அனைவராலும் நன்கு அறியப்பட்ட சுற்றுச்சூழல் ஆர்வலராகவும் விளங்கினார், அவரது முக்கிய நோக்கமான சமூக-சுற்றுச்சூழல் மாற்றத்தை கொண்டு வருவதற்கு அரசியலில் அவரை ஈடுபடுத்திக்கொண்டார். குப்பைக் கிடங்குகளில் பல மணிநேரம் செலவழிப்பதன் மூலம் மறுசுழற்சி செய்வதில் உள்ள நுணுக்கங்களைப் அவர் தெரிந்துகொண்டார், அவரின் இந்த செயல் பிரச்சனைகளை தீர்ப்பதர்க்கு அவர் மேற்கொண்ட அணுகுமுறையைக் காட்டுகிறது. அவர் இலங்கையின் பல நகரங்களில் ‘prathichakkrikaranaya’’ (மறுசுழற்சி) யோசனையை ஊக்குவித்தார். திடக்கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கான தேசிய திட்டத்தின் நிறுவனராக விளங்கினார். அவரது தேர்தல் பிரச்சாரத்தில் மற்ற பிரச்சனைகளுடன் சேர்த்து காலநிலைதன்மையின் முக்கியத்துவத்தையம் முன்னெடுத்தார்.


Women of STEM, April 2020



ரீனா குப்தா

டெல்லி அரசாங்கத்தின் ஆலோசகர்.இந்தியா

Reena Gupta


ரீனா குப்தா ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் ஆவார், World Bank, Oxfam, and AMUL milk cooperative ஆகியவற்றின் பொறுப்புகள் உட்பட பாலினம், சுற்றுச்சூழல் மற்றும் நிலையான மேம்பாடு ஆகியவற்றில் தனது புகழ்பெற்ற வாழ்க்கைக்காக அறியப்பட்டவர். மின்சார வாகனங்களைப் பயன்படுத்துவதைச் செயல்படுத்துதல் மற்றும் மாசுபாட்டைச் சமாளிக்க பசுமை டெல்லி போன்ற கருவிகளை உருவாக்குதல் போன்ற சுற்றுச்சூழல் பிரச்சினைகள் தொடர்பான கொள்கைகள் மற்றும் நிர்வாக முன்முயற்சிகளை ஊக்குவிப்பதிலும் செயல்படுத்துவதிலும் குப்தா முக்கிய பங்கு வகித்துள்ளார். ரீனா, "Greening Delhi," என்ற தில்லி அரசாங்கத்தின் முன்முயற்சிக்கு தலைமை தாங்கினார், இதன் மூலம் அருகிலுள்ள பூங்காக்களை மேம்படுத்தவும், காலியிடங்களை சமூகப் பூங்காக்கள் மற்றும் காடுகளாக மாற்றவும், நகர்ப்புற பசுமையான இடங்கள் மற்றும் வசதிகளை மேம்படுத்தினார். கூடுதலாக, அவர் நகர்ப்புற விவசாயம் மற்றும் பூச்சிக்கொல்லி இல்லாத விவசாயத்தை தீவிரமாக ஆதரித்தார், மேலும் இந்தியாவில் பாதுகாப்பான உணவு இயக்கத்திற்காக குரல் கொடுத்தார்.


– Multiple Sources



மொழிபெயர்த்தது: மு.கோபிநாத்



"பாதிக்கப்பட்டவர்களுக்கு அப்பால் " என்ற பதிப்பை படித்ததற்கு நன்றி



The translations have been led by volunteers. We thank DLF Foundation and Social Lens for facilitation these translations.


If you find any issues with the translated text, please email us at:

contact@womenforpolitics.com



Comentarios


bottom of page