top of page

பாதிக்கப்பட்டவர்களுக்கு அப்பால்: தெற்காசியாவில் மாற்றத்தை ஏற்படுத்தும் பெண் தலைவர்களை பற்றிய ஊக்கமளிக்கும் கதை..

Writer's picture: Women for PoliticsWomen for Politics

பாதிக்கப்பட்டவர்களுக்கு அப்பால் தொடரின் நான்காவது பதிப்பு 2023: தெற்காசியாவில் மாற்றத்தை முன்னெடுத்து வரும் பெண் அரசியல் தலைவர்களின் எழுச்சியூட்டும் கதைகளை உங்களுக்குக் கொண்டு வருகிறது.


இந்தப் பதிப்பில் நஹீத் ஃபரித், டாக்டர் ஆயிஷா கவுஸ், சீதா குருங், டாக்டர் ஷிரின் ஷர்மின் சௌத்ரி மற்றும் ரோகினி குமார் விஜேரத்னா ஆகியோரின் குறிப்பிடத்தக்க கதைகள் இடம்பெற்றுள்ளன.


Let's shift the spotlight from women as mere victims to the powerful agents of change and leadership they truly are!



நஹீத் ஃபரித்

ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத்தில் முன்னாள் அமைச்சர்- இளம் அமைச்சர், நாடு கடத்தப்பட்டவர்


Naheed Farid Former Minister in Parliament of Afghanistan- Youngest minister, in-exile


நஹீத் ஆப்கானிஸ்தானின் முன்னாள் இளைய நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைகளுக்காக குரல் குடுத்தார். குழந்தைகள், பெண்கள் மற்றும் கிராமப்புற சமூகங்களின் வளர்ச்சிக்காக ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தையும் நடத்தினார். பெண்களின் கல்வி உரிமைகளுக்காகவும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவரவும் குரல் குடுத்தார் . தேர்தலில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களைப் பெறுவதற்கும், ஆறு மாத மகப்பேறு விடுப்பை ஏற்படுத்துவதற்கும், பிறப்புச் சான்றிதழில் தாயின் பெயரைக் கட்டாயமாக்குவதற்கும் நஹீத் முக்கியப் பங்காற்றினார்.


George W Bush Presidential Center, August 2013


டாக்டர் ஆயிஷா கவுஸ்

பாகிஸ்தான் முஸ்லிம் லீக் - நிதி மற்றும் வருவாய் துறை இணை அமைச்சர்


Dr Aisha Ghaus  Pakistan Muslim League - Minister of State for Finance and Revenue


டாக்டர் ஆயிஷா ஒரு பொருளாதார நிபுணர் மற்றும் பாகிஸ்தானின் பிரதமர் அமைச்சரவையில் உள்ள ஐந்து பெண்களில் ஒருவர். பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்கும், நீண்டகால உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் மேக்ரோ பொருளாதாரம் மற்றும் கட்டமைப்புக் கொள்கைகளை அவர் முன்மொழிந்து செயல்படுத்தினார். அவரது பணியின் மூலம், அவர் பாகிஸ்தானில் பல பெண்களுக்கு அதிகாரம் அளித்துள்ளார் மற்றும் பாகிஸ்தானின் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு தொடர்ந்து பாடுபட்டார்.

Association Press of Pakistan, August 2022 and National Assembly Of Pakistan, February 2022



சீதா குருங்

நேபாளி காங்கிரஸ் கட்சி - நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர்


Sita Gurung Nepali Congress Party - Minister of Urban Development


2017 ஃபெடரல் தேர்தலில் கிழக்கு மாவட்டமான தெஹ்ராதும் நீலில் ஒரே பெண் வேட்பாளராக சீதா குருங் நின்றார். 2022 ஆம் ஆண்டில் FPTP மூலம் பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே பெண்மணி என்ற பெருமையைப் பெற்ற அவர், அரசியலில் பாலின உள்ளடக்கத்தைத் தடுக்கும் நேபாளத்தின் ஆழமான வேரூன்றிய ஆணாதிக்கத்தை கடுமையாக விமர்சித்தார். 2023 இல் இயற்கை மற்றும் தீயால் ஏற்பட்ட பேரழிவுகள் காரணமாக வீடற்ற குடிமக்களுக்கு வீட்டு வசதிகளை வழங்குவதையும், பேரிடர் தயார்நிலையின் முக்கியத்துவத்தை பரிந்துரைத்தார்..



டாக்டர் ஷிரின் ஷர்மின் சவுத்ரி

பங்களாதேஷ் அவாமி லீக் - அவையின் பேச்சாளர்


Dr Shirin Sharmin Chaudhary Bangladesh Awami League - Speaker of the house

டாக்டர் சவுத்ரி வங்காளதேசத்தில் முதல் பெண் சபாநாயகராகவும், பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது பெண்களின் அதிகாரம் மற்றும் மனித உரிமைகளுக்கு ஆதரவளித்தார. அவரது கொள்கைகள் விதவைகளின் வாழ்க்கை மேம்பாடு, பெண்களின்மகப்பேறு கால விடுப்பு, மற்றும் தாய்மார்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தருவதாக இருந்தது.பெண்களை தொழில் முனைவோர் ஆக்குவதின் மூலம் அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி அவர்களை வறுமையில் இருந்து மேம்படுத்த எண்ணினார். பாலின பாகுபாடின்றி சமமான கல்வி அளிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் என உறுதியாக நம்பினார்.



ரோகினி குமார் விஜேரத்னா

நாடாளுமன்ற உறுப்பினர் - இலங்கை


Rohini Kumar Wijerathna  United National Party - Sri Lanka

விஜேரத்னா இலங்கையில் கல்விப் பாடத்திட்டங்களை மேம்படுத்தி சீர்திருத்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்துள்ளார். அரசியலில் இளைஞர்கள், குறிப்பாக பெண்கள் நுழைவதன் முக்கியத்துவத்தை கூறிய அவர், அரசியலில் ஆண் ஆதிக்கத்தை மாற்றியமைப்பதிலும், பெண் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க மக்களை ஊக்குவிப்பதிலும் தற்போதுள்ள அரசியல்வாதிகளின் பங்கை உணர்த்தினார்.. ஆணாதிக்க நம்பிக்கைகள் அதிக பிரதிநிதித்துவத்திற்கு இடையூறாக இருப்பதாக நம்பும் அவர், வேட்புமனு மற்றும் தேசியப் பட்டியல்களில் கணிசமான சதவீத பெண் வேட்பாளர்கள் கொண்டுவருவதற்கான ஒரு தனிச் சட்டத்தை முன்மொழிந்தார்.



மொழிபெயர்த்தது: மு.கோபிநாத்


"பாதிக்கப்பட்டவர்களுக்கு அப்பால் " என்ற பதிப்பை படித்ததற்கு நன்றி



The translations have been led by volunteers. We thank DLF Foundation and Social Lens for facilitation these translations.


If you find any issues with the translated text, please email us at:

contact@womenforpolitics.com

Comments


bottom of page