பாதிக்கப்பட்டவர்களுக்கு அப்பால் தொடரின் மூன்றாவது பதிப்பு 2023:, பொருளாதார வலுவூட்டலுக்கான முயற்சிகளை முன்னெடுத்து வரும் தெற்காசியாவைச் சேர்ந்த பெண் அரசியல் தலைவர்களின் எழுச்சியூட்டும் கதைகளை உங்களுக்குக் கொண்டு வருகிறது
இந்த பதிப்பில், நஜிஃபா பெக், ஹினா ரப்பானி கர் மற்றும் டாக்டர் ஐஷாத் ஆகியோரின் குறிப்பிடத்தக்க கதைகளை நாங்கள் வழங்கியுள்ளோம்.
நஜிஃபா பெக்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், ஆப்கானிஸ்தான் (கிரீஸில் நாடுகடத்தப்பட்டவர்)
ஆப்கானிஸ்தானின் முன்னாள் பெண் எம்.பி.க்களில் பெக், 40% தலிபான்களுக்கு எதிராக உறுதியான எதிர்ப்பில் நிற்கிறார். ஆப்கானிஸ்தான் மாகாணமான தகார் முதல் கிரீஸ் வரை, கல்விக்கான உரிமை உட்பட மனித உரிமைகளுக்கான பெண்களின் அணுகலை நோக்கி அவர் தொடர்ந்து பணியாற்றியுள்ளார். மாநிலத்தில் இருந்து ஒரு முன்னால் அரசியல்வாதியாக இருப்பதன் ஆபத்து மற்றும் அபாயங்கள் இருந்தபோதிலும், அவர் ஆப்கானிஸ்தானில் நிலைமைக்கு எதிராக தொடர்ந்து பேசினார் மற்றும் கிரீஸ், பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் அமெரிக்கா உட்பட தூதுவர் கான்வாய்களுடன் பரப்புரை செய்வதன் மூலம் தலிபானுக்கு அழுத்தம் கொடுக்க சர்வதேச ஆதரவைப் பெறுகிறார். ஆப்கானிஸ்தானில் பெண்கள் மற்றும் மனித உரிமைகளுக்காகவும் வாத்திட்டார்.
ஹினா ரப்பானி கர்
பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர்
ஹினா பல முரண்பாடுகளையும் மீறிய, முதன்மையான பெண். அவர் பாகிஸ்தானின் இளைய மற்றும் முதல் பெண் வெளியுறவு மந்திரி ஆவார். இவர் தலிபான் தலைவர்களை சந்திக்க ஆப்கானிஸ்தானுக்கு சென்ற முதல் பெண் என்ற பெருமையை பெற்றார். “கர்” பாகிஸ்தானின் பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல் செய்த முதல் பெண் அரசியல்வாதி. குறிப்பாக இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானுடனான உறவுகளை மேம்படுத்தும் தனித்துவமான வெளியுறவுக் கொள்கைக்காக அவர் நன்கு அறியப்பட்டவர். பாக்கிஸ்தானின் சுற்றறிக்கைக் கடனை எரிசக்தித் துறையில் குறைப்பதில் அவர் பணியாற்றினார்.
– The Firstpost, April 2022
டாக்டர் ஐஷாத் அலி
மாலத்தீவு கல்வி அமைச்சர்
மாலத்தீவில் முதல் பல்கலைக்கழகத்தை நிறுவுவதில் மாலத்தீவின் தலைவரான டாக்டர் ஐஷாத் முக்கிய பங்கு வகித்தார். COVID-19 காலத்தில் மாணவர்களுக்கு கல்வியை கொண்டுசெல்வதற்கு யுனெஸ்கோ நிறுவனத்துடன் சேர்ந்து பண்ணியாற்றினார். மாலத்தீவில் கல்வித் துறையை வலுப்படுத்தவும் பள்ளிகளில் கற்பித்தல் தலைமைத்துவத்தை மேம்படுத்தவும் பல திட்டங்கள் மற்றும் கொள்கைகளை அவர் தொடங்கியுள்ளார்.
–UNESCO, August 2020
மொழிபெயர்த்தவர்: ராமநாராயணன்
"பாதிக்கப்பட்டவர்களுக்கு அப்பால் " என்ற பதிப்பை படித்ததற்கு நன்றி
The translations have been led by volunteers. We thank DLF Foundation and Social Lens for facilitation these translations.
If you find any issues with the translated text, please email us at:
contact@womenforpolitics.com
Comments