பாதிக்கப்பட்டவர்களுக்கு அப்பால் தொடரின் இரண்டாவது பதிப்பு 2023:, பொருளாதார வலுவூட்டலுக்கான முயற்சிகளை முன்னெடுத்து வரும் தெற்காசியாவைச் சேர்ந்த பெண் அரசியல் தலைவர்களின் எழுச்சியூட்டும் கதைகளை உங்களுக்குக் கொண்டு வருகிறது
நகீத் ஃபரித்
ஆப்கானிஸ்தானின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மகளிர் நாடாளுமன்ற ஆணையத்தின் முன்னால் தலைவி.
நகீத் ஒரு முக்கிய ஆப்கானிய அரசியல்வாதி மற்றும் பெண்கள் உரிமை ஆர்வலர், மனித உரிமைகள் பிரச்சினைகளை எழுப்புவதில் தனது அர்ப்பணிப்புக்காக அனைவராலும் அறியப்பட்டவர், பலரை ஊக்குவிக்கிறார். சட்டப் பட்டதாரியான இவர், ஒதுக்கப்பட்ட சமூகங்கள், குழந்தைகள் மற்றும் பெண்களுக்காக தன்னார்வ தொண்டு நிறுவனங்களை நிறுவி நடத்தி வருகிறார். தலிபானின் மரபுவழி மற்றும் கட்டுப்படுத்தும் அரசியலின் பின்னணியில், ஆப்கானியர்களுக்கு, குறிப்பாக இப்பகுதியில் உள்ள பெண்களுக்கு கல்வி மற்றும் சுகாதார நிலைமைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தார். பாலின சமத்துவத்தின் முக்கியத்துவம், மற்றும் ஆண்களால் செய்யக்கூடிய அனைத்து விடயங்களையும் பெண்களும் செய்ய முடியும் என்று அவர் பேசினார் ஆப்கானிய இளைஞர்கள் மற்றும் பெண்களை அரசியல் செயல்பாட்டில் ஈடுபடுத்துவதில் அவர் அர்ப்பணிப்புடன் செயல்பட்டார்.
– World Forum for Ethics in Business
சுக்ரியா பராக்சாய்
நார்வேக்கான ஆப்கானிஸ்தானின் தூதர் - ஆப்கானிஸ்தானின் தேசிய சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினர்
சுக்ரியா பராக்சாய், ஆப்கானிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் பெண்களின் உரிமைகளுக்காக வாதிடுபவர். தலிபான்களால் தாக்கப்பட்ட பிறகு, பெண்களுக்கான ரகசிய பள்ளிகளை நிறுவவும், நாட்டின் பெண்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கவும் அவர் பயணத்தை மேற்கொண்டார். அவர் "ஐனா-இ-ஜான்" அல்லது "விமன்ஸ் மிரர்" என்ற தேசிய வார இதழை நிறுவினார், இது ஆப்கானிய பெண்களுக்கு சுகாதாரம், கல்வி மற்றும் சமூக முன்னேற்றம் பற்றி தெரிவிக்கிறது. குழந்தைத் திருமணங்கள், கட்டாயத் திருமணங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு வழக்கறிஞராக செயல்பட்டார்.
– Parliamentarians Network for Conflict Prevention
டாக்டர் நஃபிசா ஷா
பாகிஸ்தானின் தேசிய சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினர்
டாக்டர் நஃபிசா பெண்கள் அதிகாரமளிப்பதற்கான காரணத்தை முன்வைத்துள்ளார், அது பெண்கள் பாராளுமன்றக் குழுவின் செயலாளராக ஓட்டுனர் உரிமைகள் அடிப்படையிலான சட்டங்கள் மூலமாகவோ அல்லது பாகிஸ்தானில் கவுரவ வன்முறையைத் தடுப்பதற்கான முன்மாதிரியான பணி மூலமாகவோ இருக்கலாம். பொது இடங்களில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதன் முக்கியத்துவத்தை, பெண்களின் சமத்துவத்திற்கு முக்கியமான சட்ட சீர்திருத்த மசோதாக்களை தனது பதவிக்காலத்தில் அறிமுகப்படுத்தினார்.
– The Tribune, March 2016
சிவ மாயா தும்பஹம்பே
நேபாளத்தின் முன்னாள் சட்டம், நீதி மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர்
தும்பஹம்பே பொதுக் கல்விக்கான அரசாங்க செலவினங்களை அதிகரிக்க குரல் குடுத்தார். 40 ஆண்டுகளாக அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வரும் இந்த கம்யூனிஸ்ட் தலைவர், மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அரசியல் கட்சிகளிலும் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடங்களை கட்டாயமாக்கும் மாநில சட்டத்தை முறையாக செயல்படுத்துவதற்கு பரப்புரை செய்தார், மற்றும் பிரதிநிதித்துவத்தை நிறுவனமயமாக்குவதற்கு கடுமையாக குரல் குடுத்தார்.
பிந்தா பாண்டே
நேபாளத்தின் பிரதிநிதிகள் சபையின் முன்னாள் உறுப்பினர்
பிந்தா பாலினம் மற்றும் சமூக நீதிக்கான ஒரு முன்னோடியாக திகழ்ந்தார். ஒரு பெண்ணிய கம்யூனிஸ்ட், அவர் அரசியல் பிரதிநிதித்துவத்தில் ஆண்களின் ஆதிக்கத்திற்கு எதிராக வெளிப்படையாகப் பேசினார். பெண்களுக்கு அதிகாரம் அளிக்கக் கோரி, தேசிய சட்டமன்றத்தில் பெண்களின் 50% பிரதிநிதித்துவத்திற்காக அவர் குரல் குடுத்தார். தாயின் பெயரின் மூலம் குடியுரிமைக்கான, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு கடுமையான சட்டங்கள் மற்றும் தண்டனைகள் வழங்கும் சட்டத்தை முன்மொழிந்தார், நேபாள ஆணாதிக்கத்தின் அடிப்படைகள் மற்றும் இதுபோன்ற வழக்குகளை மேற்பார்வையிட குடும்ப நீதிமன்றங்களை நிறுவுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை உருவாக்கினார்.
– Nepali Times, April 2021
மறைந்த திருமதி சையதா சஜேதா சௌத்ரி
வங்கதேசத்தின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர்
சையதா சஜேதா 1969 இல் மொஹிலா அவாமி லீக்கின் ஸ்தாபக பொதுச் செயலாளராக இருந்தார் மற்றும் 1975 வரை பதவியில் இருந்தார். முன்னணி தலைவராகவும், கொள்கை வகுப்பாளராகவும், அவர் கிராமப்புற வளர்ச்சி மற்றும் கல்விக்கு பங்களித்தார், சபையின் துணைத் தலைவராக பணியாற்றினார். மேலும், அவர் சமூகப் பணிகளையும் செய்தார் மற்றும் விளையாட்டு, கலாச்சார மற்றும் மத நிறுவனங்களின் வளர்ச்சிக்கு பங்களித்தார்.
ரோசைனா ஆடம்
மாலத்தீவு நாடாளுமன்ற உறுப்பினர்
மாலத்தீவு ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த சில பெண் எம்.பி.க்களில் ரோசைனாவும் ஒருவர், மேலும் அரசியல் துறையில் பெண்களின் உரிமைகள் மற்றும் சம வாய்ப்புகளுக்காக தீவிரமாக குரல் குடுத்தார்.. அவர் ஜனநாயக புதுப்பித்தல் மற்றும் மனித உரிமைகள் பிரச்சாரத்தின் (PARRT) தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஆவார். தேர்தலில் பெண்கள் பங்கேற்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தலைமைப் பதவிகளில் இருக்கும் பெண்களுக்கு, குறிப்பாக பாராளுமன்றத்தில், முடிவெடுக்கும் செயல்பாட்டில் அவர்களின் அர்த்தமுள்ள ஈடுபாட்டை உறுதிப்படுத்த அவர் உறுதியாக ஆதரித்தார். மாலத்தீவின் அரசியல் சூழலை வடிவமைப்பதில் பெண்களுக்கு முன்னுரிமை அளிப்பதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்துனார்
– Women Political Leaders, August 2019
மொழிபெயர்த்தது: ராமநாராயணன்
"பாதிக்கப்பட்டவர்களுக்கு அப்பால்" என்ற பதிப்பை படித்ததற்கு நன்றி
The translations have been led by volunteers. We thank DLF Foundation and Social Lens for facilitation these translations.
If you find any issues with the translated text, please email us at
contact@womenforpolitics.com
Comments